Thursday, September 22, 2016

ஊடகத்தின் ஊனம்!

ஊடகத்தின் ஊனம்!

இந்த கேசத்தின் மீது நாம் காட்டும் அக்கறை கூட இந்த தேசத்தின் மீது செலுத்தாதது யார் குற்றம்! ஒரு பெண்ணை பலர் கண்முன்னே இரக்கமின்றி வெட்டி சாய்த்தவனுக்கு தலையங்கத்தில் இடமும், நேசங்களை நெஞ்சில் சுமந்து தேசத்தை காத்த மாவீரர்கள் எதிரியின் சதியால் பெட்டிக்குள், சவபெட்டிக்குள் வீழ்ந்ததை பெட்டி செய்தியாய் ஊடகங்கள் மக்களிடம் சேர்ப்பித்ததை அவமானமாக கருதவா? இல்லை இதற்கு நம் மக்களே காரணம் என்று அவர்கள் மீது கோபம் கொள்ளவா?

நம் தேசம் காத்த நேசங்கள் பெட்டிக்குள் வீழ்ந்ததை பெரிதாய் எழுதினால் பெட்டிகள், பணப்பெட்டிகள் சேராது என்றே நம் ஊடகங்கள் இதை பெட்டி செய்தியாய் போட்டது! ஊடகம் தன் தர்மத்தை கடைபிடித்ததா இல்லை கோட்டை விட்டதா? இந்த கேள்வி நம்மில் பலருக்கும் எழும், அப்படி எழுவது நியாயம் தான்! இந்த கேள்வி நமக்கு எழும்போது சில கேள்விகள் நம்மை நாமே கேட்க வேண்டும்!  நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரி போர் வீரனின் மரணத்திற்க்காக சில நொடிகளாவது மவுனித்திருப்போம்? நம் பள்ளிகளிலோ (அ) கல்லூரிகளிலோ (அ) பணிபுரியும் இடத்திலோ இதை பற்றி பேசியிருப்போம்? நம்மில் பலர் வாட்ஸாப்ப், முகநூல் , ட்விட்டர் போன்ற    சோசியல் நெட்ஒர்க்கில் வரும் செய்தியைய் கடமைக்கு சேர் செய்துவிட்டு அதோடு மறந்து விடுவோம்! ஆனால் கொலை, கொள்ளை, சினிமா, அரசியல் போன்றவற்றில் நாம் காட்டும் விருப்பமும் ஷேர் செய்யும் விதம்மும் அளப்பரியவை! இப்படி நாம் ஒவ்வொருவரும் சிலாகிப்பதை தான் இந்த ஊடகமும் தரும் அப்படி தந்தால் தான் அவர்கள் பெட்டிகள் நிறையும்! அதுதான் அவர்களுக்கு மக்களாகிய நாம் மறைமுகமாய் இட்ட பணி! நாம் இட்ட பனியால் கெட்ட குடி, பட்டுபோகும் இந்த பட்டொளி வீசும் தேசக்கொடி காக்கும் உயிர்களுக்கு நாமே முக்கியத்துவம் தராத காரணத்தால் நம் நேசங்களின் ஆன்மாக்களை துவேசம் செய்கின்றோம்! மக்களாகிய நாம் நம் எண்ணங்களை மாற்றி - நன்மை தரும், வன்மை தரும், மேன்மை தரும் செய்திகளை விரும்பினால் ஒழிய இவை சாத்தியம் அல்ல.  ஊடக மாற்றம் அல்ல இது உன்னுள் மாற்றம் நிகழ்ந்தால் ஒழிய  ஊடக மாற்றம் நிகழாது!  அதுவரை ஊடகத்தின் ஊனம் தொடரும்....


யார் மாறனும்?

No comments:

Post a Comment