Monday, July 18, 2016

காதல் கடிதம் எழுத ஏன் தாமதம்!

காதல் கடிதம் எழுத ஏன்  தாமதம்!

மேஷத்தில் ஆரம்பித்த காதல் கடிதம் முடியாததால்! என்னை மோசம் செய்கிறாய்  என்றாய்!

ரிஷபத்தில் நானும் காதல் கவிதையை  தொடர! எல்லாம் வேஷம் என்கிறாய்!

மிதுனத்தில் நானும் தொடர இதுதான்! இதுதான்! இன்னும் மெதுவாய் என்கிறாய்!

கடகம் தாண்டி நான் தொடர்ந்ததால்! இதுவே கடைசி என்கிறாய்!

சிம்மம் கடந்தும் முடியாததால்! பெண் சிங்கம் போல் கர்ஜிக்கிறாய்!

கன்னி உனை எண்ணி கடிதம் எழுத முனைதேன்!

துலாமையும் தாண்டி துள்ளலாய் உன் எண்ணங்கள் தாண்டி செல்லவே!

விருச்சிகத்தில் முடிக்க எண்ணியே விரைந்து நான் எழுத!

தனுசாய் என் மீது அம்பை எய்கிறாய்!

மகரத்தில் இந்த கடிதம் முடித்து சிகரம் தொட எண்ணிய என்னை!

இந்த கும்பம் வந்து துன்பத்தில் ஆழ்த்த!

மீனாகி! விண்மீனாகி!   உனக்கான என் கடிதம் நீண்டு கொண் டே செல்கிறதே

வஞ்சியே வஞ்சித்துவிட்டன பன்னிரெண்டு ராசிகளும்!  உன் காதல் கடிதம் முடிக்க முடியாமல் நம் காதல் போல நீண்டு கொண்டே செல்கிறதே!!!

No comments:

Post a Comment